

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை விஜயரட்னம் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சேந்தன்(பிரான்ஸ்), தனுசன், தனுசிகா, தர்சிகா(பல் மருத்துவர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அருந்தவச் செல்வி, முருகரத்தினம்(சுவிஸ்), வரதலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் துதி அந்தியகால சேவை, இல.56, மணிக்கூட்டு வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 10-04-2019 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-04-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I MISS U