Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 24 FEB 1947
விண்ணில் 20 MAY 2026
திரு சிதம்பரப்பிள்ளை வல்லிபுரம்
வயது 79
திரு சிதம்பரப்பிள்ளை வல்லிபுரம் 1947 - 2026 முள்ளியான், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். போக்கறுப்பு முள்ளியானைப் பிறப்பிடமாகவும், குடமியன் வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வல்லிபுரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

குடும்பத்தின் குலதெய்வமே
 பாசத்தின் உறைவிடமே அப்பா!
 நீங்கள் எம்மை விட்டுப் போய்
நாட்கள் 31 ஆனதே

வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
 உமை வருத்தி எமைச் சுமந்தீர்
 உண்மை அன்பை எமக்களித்தீர்

உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
 எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்

 31 நாட்கள் உருண்டு ஓடினாலும்
 அப்பா! உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு அகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 18-06-2026 வியாழக்கிழமை மு.ப 04:00 மணியளவில் கீரிமலை தீர்த்தக்கரையில் நடைபெறும், அதனைத்தொடர்ந்து சபிண்டீகரண கிரியைகள் 19-06-2026 வெள்ளிக்கிழமை மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் கலந்துக் கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக் பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute