மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUL 1944
இறப்பு 19 JUN 2021
திரு சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்
வயது 76
திரு சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் 1944 - 2021 பலாலி, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பலாலி மேற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கு சுன்னாகம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 19-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கலாரதி, சிவலோகநாதன், சிவலோகநாயகி(லண்டன்), சிவசக்தி(பிரான்ஸ்), குகநாதன்(சுவிஸ்), பராசக்தி, வாசுகி, சத்தியசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கீதாஞ்சலி, தேவானந்தம்(பிரான்ஸ்), வேணுகா(சுவிஸ்), நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தங்கம், தங்கச்சிப்பிள்ளை, காலஞ்சென்ற அன்னலட்சுமி, கந்தசாமி, கந்தையா, காலஞ்சென்ற சின்னத்தங்கச்சி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வைஜெயந்திமாலா, இராசரத்தினம், செல்வராணி, ரஞ்சிதமலர், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிநயா, சாதுரியன், தேனுஜன், தருணன்(லண்டன்), பிரண்(லண்டன்), பிரவிகா(லண்டன்), வைஷ்ணவி(பிரான்ஸ்), பிரணீத்(பிரான்ஸ்), சைந்தவி(பிரான்ஸ்), சன்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் கிந்துசிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவலோகநாதன் - மகன்
சிவசக்தி - மகள்
குகன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos