1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிதம்பரம் ஸ்கந்தகுமார்
(தமிழ் வாணன்)
முன்னாள் புகையிரதப்பகுதி உத்தியோகஸ்தர். K.K.S, யாழ்ப்பாணம்
வயது 71
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரம் ஸ்கந்தகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் என்னைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன்.
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
ஆழ்ந்த அனுதாபங்களும் , இரங்கல்களும், அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். தவஜா ெஜயந்திரன் குடும்பம்