Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 NOV 1956
மறைவு 01 JUN 2024
அமரர் சிற்றம்பலம் செல்வராஜா
வயது 67
அமரர் சிற்றம்பலம் செல்வராஜா 1956 - 2024 மாதகல், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 10-ம் திகதி ஆவணி மாதம்

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மாங்குளம், நெதர்லாந்து, ஜேர்மனி Nuremberg ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிற்றம்பலம் செல்வராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பை விதைத்த தலைவரே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்..?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்..?

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து இரண்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!

நீங்கள் காட்டிய பாதை
எமக்கு கலங்கரை விளக்கம்..!
நீங்கள் உழைத்த வியர்வை
எங்கள் உடம்பில் ஓடும் உதிரம்..!

எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும் 
உங்கள் நினைவு எமை விட்டு 
அகலாது நாங்கள் உங்களை மறந்தால்
 தானே நினைப்பதற்கு நினைவே
 என்றும் நீங்கள் தான் அப்பா..

கண்முன்னே வாழ்ந்த காலம் 
கனவாகிப் போனாலும் எம்முன்னே
 உங்கள் முகம் எந்நாளும் 
உயிர் வாழும் அப்பா!

இரவும் பகலும் உங்கள் முகம்
 இதயம் வலிக்கிறது அப்பா..!
மறுபடியும் உங்களைப் பார்க்க 
மாட்டோமா என ஏங்கித் 
தவிக்கிறோம் அப்பா..!

கண்களிலெல்லாம் சிவப்பு மேகம்
கண்ணீர் சிந்துது மழையாக..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள்.