Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
திரு சிதம்பரப்பிள்ளை பரமசாமி 2026 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கச்சாய் வடக்கு, கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வெள்ளாம்போக்கட்டி, கிளிநொச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவிலடியை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியா(பூந்தோட்டம்), கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பரமசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 ஓடி மறைந்ததையா உங்கள்
அன்பு முகம் காணாது துடிக்கின்றோம்
காலங்கள் உருண்டோடி விட்டதையா
கண்ணிமைக்கும் பொழுதினிலே எல்லாமே
முடிந்து போனதையா

புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது
ஆனாலும் அது உண்மை இல்லை
என்று நினைத்தபின் எம் மனம் கலங்குகிறது

எம் நெஞ்சுக்குள் வாழும் உங்கள்
நினைவுகள் எப்போதும் எம்
நெஞ்சை விட்டுப் போகாது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியைகள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று காலை கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 10-06-2026 புதன்கிழமைஅன்று முற்பகல் 11.30 மணியளவில் அவரது இல்லத்திலும் (இல, 10, இனிசியம் வீதி, தெஹிவளை) நடைபெறவுள்ளது. அத்துடன், அன்னாரின் 45 ஆம் நாள் நினைவுநாள் சிறப்பு பூஜை மற்றும் அன்னதான நிகழ்வு 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்திலும் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
No. 10, Initium Road, ”
Dehiwala.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.