யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் யோகானந்தசிவம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
எம் குடும்பத்தலைவனே!
எம் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் என்றும் உயிர் வாழும்
எங்கள் இதயமதில் இறுதி வரை
நிலைத்து நிற்கும் ஐயா
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
காலமோ ஒரு மாதம் ஆனது – என்று
போறது கதி தான் மோட்சம்
பெற்றது நீங்கள் எனினும்
பாசத்தில் பரிதவித்தோம்
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள் நாம்
என்றும் பயணிப்போம்!
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்களின் அணையா விளக்காக ஒளிபரப்பிய சிவமே
16-11-2023 அன்று அணைந்து தெய்வத்துள் தெய்வமாக பத்ம பாதங்களை நோக்கி நகர்ந்த வேளையில் இத்துயர் செய்தி அறிந்து எங்கள் இல்லங்களுக்கு நேரில் வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர் களுக்கும், அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும், தொலைபேசி உள்ளங்களுக்கும், சிரம் தாழ்ந்த நன்றிகள், லங்காஸ்ரீ இணையவழி மூலம் எமக்கு ஆறுதல் கூறி எமது துக்கத்தில் பங்குகொண்ட அனைத்து நேரலை ஊடாக இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள், மலர் வளையங்கள் சாத்தியவர்களுக்கும், தேவாரத் தோத்திரங்களைப் பாடியவர்களுக்கும் மற்றும் கிரியைகளை நடாத்திய அந்தணப் பெருமக்களுக்கும், தேவையான போதெல்லாம் உதவி ஒத்தாசைகள் புரிந்த அனைவருக்கும் உற்றார், உறவினர்கள், அன்பு நெஞ்சங் களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள். மேலும் 16-12-2023ல் நடைபெறும் ஆத்ம சாந்தி கிரியைகளிலும் கலந்து எங்கள் குடும்பத் தலைவரின் ஆன்ம ஈடேற்றத்திற்காக பிரார்த்திக்கும் எல்லா நல் உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த எங்கள் நன்றிகள். இம்மலரை குறுகிய காலத்தில் திருப்தியான வடிவமைப்புடன் அச்சிட்டுத் தந்த சண் பதிப்பகத்தினருக்கும் எங்கள் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
I'm still coming to terms with the fact that you're no longer with us. Sending prayers to the family for strength during this difficult time. RIP Siththappa