யாழ். கச்சேரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Anderson Flats ஐ வதிவிடமாகவும், லண்டன் Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீத்தா சிவறாஜா(Née Janaka) அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான பேச்சின் உறைவிடமே!
அழகான பேச்சின் சொந்தக்காரியே!
பண்பாகப் பேசும் பாசக்காரியே!
பாசம் நிறைந்த அம்மாவே!
உங்கள் நினைவுகளில்
நாமிங்கே தவித்து நிற்க
நித்தியமாய் உறங்குகின்றாய்
நினைவெல்லாம் மறந்து
உங்கள் கண்களில் நாம்
கண்ணீரைக் கண்டதில்லை
புன்நகைக்கோ உங்கள்
முகத்தில் குறைவுமில்லை..
மனதோடு உன்சிரிப்பு இடமின்றி
நிறைந்திருக்க
நெஞ்சோடு உங்கள் உருவம்
நிழலாக உலாப்போக
கண்ணோடு உங்கள் விம்பம்
கண்ணீராய் உருகுதம்மா
உங்கள் உயிர் பறித்த காலன்
சதியோ யாம் அறிவோம்..
ஆண்டுகள் கரைந்தாலும் உங்கள்
நினைவில் வாழ்கின்றோம்
உம்மை நாம் கண்ணீரால் அர்ச்சிக்கின்றோம்
எம் மனதைக் கல்லாக்கி- உமது
ஆத்மா சாந்திக்கு என்றும் இறைவனை பிரார்த்திக்கும்
கணவர், மகள், மருமகன், அம்மா, சகோதரர்கள்..
A smile for all, a heart of gold. The very best this world would hold. Never selfish, always kind. What loving memories you left behind.