யாழ். கச்சேரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Anderson Flats ஐ வதிவிடமாகவும், லண்டன் Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீத்தா சிவறாஜா(Née Janaka) அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் அறிவும் அழகும் பணிவும்
பாசமும் துணிவும் மிக்க மனைவியாக
தாயாக பூத்துக்குலுங்கிய உங்கள் முகம்
இன்று கண்களில் படாததால் உங்கள் ஆயுள்
அவசரமாக முடிந்துவிட்டதாக கூறுகின்றார்கள்.
அவர்களுக்கு எப்படித்தெரியும் நீங்கள் எங்களில்
ஒருவராய் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றீர்கள் என்று.
அம்மா இரண்டு ஆண்டுகள் அல்ல
இன்னும் இருபதாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
எம்மனதில் உங்கள் சிரித்த முகம்,
குறும்பான கதைகள், நீங்கள்
எங்களுக்காக செய்த தியாகம்.
அன்பு, பரோபகாரம், அறிவு,
தன்னடக்கம், விட்டுக்கொடுப்பு எத்தனை எத்தனை.
அதிகமான இன்பத்தை தந்த நீங்கள்
அதிகமான துன்பத்தையும் தந்து போனீர்களே...
அம்மா என்றும் எங்கள் மனதில்
மறையாது மறக்கவும் முடியாது.
உங்கள் திடீர் பிரிவினால்
தினமும் தாங்க முடியாமல் தவித்துக்கொண்டும்!!
கனவில் நிழல்மாதிரி காட்சி அளித்தும்!!
உங்கள் ஆத்மா சாந்திக்கு என்றும் இறைவனை பிரார்த்திக்கும்
கணவர், மகள், மருமகன், அம்மா, சகோதரர்கள்.
A smile for all, a heart of gold. The very best this world would hold. Never selfish, always kind. What loving memories you left behind.