யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சிரோன்மணி பூதத்தம்பி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
"தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை
அன்னையை மிஞ்சிய தெய்வமும் இல்லை”
அன்பெனும் சொல்லின் அளவுகோல் அம்மா!
உணவைத் தினமும் ஊட்டி உணர்வைப் பருக்கினாய்
உடலுள் உயிரைக் காத்து உலகில்
என்னை உயரச்செய்தார் அம்மா!
வாழ்க்கையில் நியதி நிறைவுனும் எல்லை
அவன் விதிப்படியே சென்றாய் அம்மா!
என் உயிர் நிலைக்கும் வரை உங்கள் நினைவு என்
நெஞ்சில் நிலைத்திருக்கும் அம்மா!
ஆயிரம் உறவுகள் அருகில்
இருந்தாலும் அம்மா!
உங்கள் அன்புக்கு அது ஈடாகுமா
காலங்கள் விடைபெறலாம்
ஆனாலும் கண்முன்னே நீங்கள்
வாழ்ந்த நினைவுகள் ஒரு போதும் அகலாது
வலிகள் சுமந்து விழிகள் நனைந்து வாழும் நாள் முழுக்க
உங்கள் நினைத்து வாழும் உங்கள் பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்..
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our deepest condolences to Periappa (Vasanthakumar) & family.