Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 08 APR 1963
இறப்பு 08 DEC 2023
திரு சின்னையா புஷ்பநாதன்
வயது 60
திரு சின்னையா புஷ்பநாதன் 1963 - 2023 புத்தூர், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Greenford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா புஷ்பநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 07-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 12:00 PM மணிமுதல் 04:00 PM மணிவரை Northolt Village Community Centre, Northolt UB5 6AD, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும். அனைவரும் அதுசமயம் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

இங்ஙனம், புஷ்பநாதன் குடும்பத்தினர்
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 13 Dec, 2023