Clicky

தோற்றம் 07 APR 1953
மறைவு 29 JAN 2026
திரு சின்னையா கனகரத்தினம்
வயது 72
திரு சின்னையா கனகரத்தினம் 1953 - 2026 அல்வாய் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இன்று நாம் எமது அன்புக்குரிய கனகு என அன்பாக அழைக்கப்படும் கனகரத்தினம் சுவாசிப்பதை நிறுத்தி அமரத்துவம் அடைந்து விட்டார் என்ற துன்பகரமான செய்தியை அறிந்தோம். 1960 ம் ஆண்டுகளில் அல்வாய் முத்துமாரி அம்மன் கோவில் பாடசாலையில் ஆரம்பித்த உறவு 65 வருடங்களின் பின் முடிவுக்கு வந்துவிட்டது. கடைசியாக 30 வருடங்களுக்கு முன்னர் பாரிசில் சந்திக்க ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. உண்மையில் அது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது. நிறைய பழைய சம்பவங்களையும், வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் பற்றி பேசி மகிழ்ந்தோம். அவர் இளைமைக் காலத்தில் இருந்தே சிறந்த உழைப்பாளிக்கு உதாணமாக இருந்தார். அனைத்துக் கஸ்டங்களின் மத்தியிலும் சிரித்த முகத்துடனும், உயர்ந்த பண்புடனும் மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுத்தார். மற்றவர்களை குறை சொல்வதை எப்போதும் வெறுத்தார். அந்த உயர்ந்த பண்பு அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்றாகும். 10 வயதில் தொடங்கிய இந்த அரிதான உறவு 70 களில் முடிவுக்கு வந்தது. அவர் எம்முடன் நினைவில் வாழத் தொடங்கிவிட்டார். கனகு நிறையவே தன்னலமின்றி உழைத்துவிட்டீர்கள்! அமைதியாக தூங்குங்கள்! கனகு நீங்கள் ஒரு உண்மையான மனிதன்! உங்களிடம் இருந்து கற்ற அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம். வைத்திலிங்கம்-சிவக்கொழுந்து குடும்பத்தினர்.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 29 Jan, 2026