1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னவி சின்னராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை
அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்
உயிரிலும் உணர்விலும்
ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு
இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை
நாம் உன்னோடு இருந்தவரை
உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி 11-03-2020 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்
my deepest condolence to late Sinnavi Sinarasa, rest in pease.