
அமரர் சின்னத்துரை துரைராஜா
இளைப்பாறிய தபால் அதிபர்
வயது 81

அமரர் சின்னத்துரை துரைராஜா
1939 -
2021
வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வாழ்க்கை என்பது வலியுடனேயே பயணிக்கும் .
வலியை நீக்கி வாழ்க்கையை தொடர்வதுவே மனித வாழ்க்கை.
அந்தவகையில் எங்களுடைய பெரியண்ணரின் மறைவு ,பெரிய
வலியை ஏற்படுத்தாவிட்டாலும் அண்ணரின் நினைவுகள் மனதில்
அலைபோல் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றது .
இந்த உலகத்தில் எவரும் இங்கு நிரந்தரமாக தங்கிவிடுவதில்லை .
ஆனால் அவர்களுடைய நினைவுகளே எங்களுடன் நிரந்தரமாகிவிடும் .
அறுபதுகளின் நடுப்பகுதியில் கொழும்பிலிருந்து விடுமுறைக்கு
வந்த அண்ணர் மேசைக்கத்தியும் , முள்ளுக்கரண்டியும் வாங்கிகொண்டுவந்தார் .அன்றுதான் முதலில் நான் அவைகளை பார்த்து வியந்தது இன்னும் என்நினைவில் உள்ளது .
அத்துடன் எங்கள் கல்வி வளர்ச்சிக்கும் பெரிதும் பங்காற்றியுள்ளார் .
அந்த காலங்களில் வாராந்த இந்திய ஏடுகளான கல்கி ,குமுதம், ஆனந்தவிகடன் ஆகிய தமிழ் புத்தகங்களையும் .ஆங்கில ஏடுகளான
நியூஸ்வீக் ,ரீடீசடைஜெஸ்ட் (Reader's Digest) நியூயோர்க்ட்டிமெஸ் (The New York Times) முதலிய புத்தகங்களை படித்து பயனடைவற்கு
ஒழுங்கு செய்திருந்தார் .
இப்படி பலநினைவுகள் பசுமையாக மனதிலுள்ளது.
நாம் வாழும் காலம் முழுவதும் அவரின் நினைவுகளை மறவாது நினைவில் நிலைநிறுத்துவதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.
Write Tribute
Deepest condolences ? and rest in peace.