

யாழ். வடமராட்சி ஊரிக்காடு நாவலடியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை துரைராஜா அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசமணி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூபவதி சகுந்தலா அவர்களின் அன்புக் கணவரும்,
ரகுகுமார்(லண்டன்), ரமேஷ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தி(லண்டன்), யசோதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கமலாதேவி, விசாகரத்தினம், உத்தரராஜா, காலஞ்சென்ற மல்லிகாதேவி, தியாகராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் ஆசை சகோதரரும்,
காசிநாதன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
மகேஸ்வரராஜா, கணேசராஜா, காலஞ்சென்ற புவனேஸ்வரன், அழகேஸ்வரராஜா, விக்னேஸ்வரன், யசோதா, காலஞ்சென்ற நேசராஜா, அருச்சுனராஜா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
அருந்தவராணி, புஸ்பராணி, அருந்தவராசா, புஸ்பராசா, பிரேமராணி, ரஜனி, சதாநாயகி, சரோஜினி, சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விகாஷ், அக்ஷரா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 28-01-2021 வியாழக்கிழமை அன்று ஊரிக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப் 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Deepest condolences ? and rest in peace.