10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்துரை தர்மலிங்கம்
(முன்னாள் உரிமையாளர் -அமுதா ஸ்டோர் நெடுங்கேணி)
வயது 77
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி, நெளுக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை தர்மலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : 03-09-2024.
ஆண்டு பத்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய் வாழ்ந்து
வையகத்தில் குறைவின்றி
நிறைவுடன் வாழ வழி வகுத்த அப்பாவே
எம்மை எல்லாம் விட்டு இறைவனடி சென்றீரோ !?
நீங்கள் எமக்கு ஊட்டியவைகள் எல்லாம்
நித்தம் நினைவில் வந்து வந்து
எம்மை நெறிப்படுத்தி செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.