1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 MAR 1950
இறப்பு 25 NOV 2020
அமரர் சின்னத்துரை சுந்தரநாதன்
வயது 70
அமரர் சின்னத்துரை சுந்தரநாதன் 1950 - 2020 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 84 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறபிடமாகவும், லண்டன் Surbiton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சுந்தரநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும் அழியவில்லை எம் சோகம்!
மாதங்கள் பன்னிரண்டு என்ன
யுகங்கள் பதினெட்டு ஆனாலும்
மாறாது எம் துயர் மறையாது உங்கள் நினைவு!

உங்களுடைய கடமைகளை செவ்வனே செய்து
எம்வாழ்வை வளம்படுத்திவிட்டு
நீங்கள் சந்தோசமாக வாழவேண்டிய நேரத்தில்
நாம் கண் மூடி முழிப்பதற்குள்
நீங்கள் நிரந்தரமாக கண்ணை மூடி விட்டீர்கள்! 

ஆறுதல் சொல்ல பலர் இருந்தும்
உங்களுடைய அன்புத்துணையும்
வழிகாட்டலுமின்றி தவிக்கிறோம்!

ஏதும் சிந்திக்க நேரமில்லாமல்
சிரமப்படாமல் போய்விட்டீர்கள்
என்று நாமே எமக்கு ஆறுதல் சொல்லி
உங்கள் நினைவிலே வாழ்ந்திடுவோம்!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 28 Nov, 2020
நன்றி நவிலல் Fri, 25 Dec, 2020