யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bondy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சசிகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
முப்பதொன்றாம் நாள் நினைவு...!
எங்கள் அன்புத் தந்தையே!
மாதம் ஒன்று எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்கு தரப்போவதில்லை
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
புன்னகை பூக்கும் பூ முகம்
பூவுலகுக்கே உதவும் உன் உயரிய குணம்
உண்மையை பேசும் உத்தமனே!
இன்று பிரிவு என்னும் துயரால்
முப்பதொரு நாட்கள் ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.