1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Landstuhl ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை ரகுராஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமைச் சகோதரனே!
அனைத்தும் உனதருகில் இருந்தும்
முடியாமல் போனது எப்படி!
விதியா? இறைவனின் சதியா?
விண்ணில் நீ கலந்துவிட்ட நாள் முதலாய்
எம் விழிகள் உறங்க மறுக்குதய்யா
கண்களில் நித்தம் ஈரம் கணப்பொழுதும் உன் சோகம்
நித்தம் நித்தம் உன் நினைவு நெருப்பாய் சுடுகுதய்யா
என்னுடைய செல்வமே உன்னைப் பெற்ற வயிறு பற்றி எரியுதடா
தாலாட்டிய உன் தாய்
உனைத் தேடித் தவிக்கின்றேன்
எங்கு ஓடி ஒழிந்தாய் மகனே
உனது முகம் காண துடிக்கின்றேன் மகனே!
நாங்களும் வாழ்கின்றோம் பாவிகளாய்
உன்னை நினைக்கையில் உள்ளமே அழுகின்றது
இதயமும் பதறுகின்றது எம் உறவே
உன்ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
அம்மா, சகோதரர்கள்