1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி கார்த்திகேசு திருச்செல்வம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ் கிறிஸ்தவ கல்லூரி கோப்பாய்
வயது 89
அமரர் சின்னத்தம்பி கார்த்திகேசு திருச்செல்வம்
1933 -
2023
கோப்பாய் வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கோப்பாய் வடக்கு கட்டுபிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கோப்பாய் மத்தி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கார்த்திகேசு திருச்செல்வம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:04-06-2024
அன்பிற்குரிய குடும்பத் தலைவனே
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே
உங்களை காண உங்கள் குரல் கேட்க
மனம் ஏங்கித் தவிக்கின்றது
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களை
விட்டு என்றும் நீங்காது
என்றும் உங்கள் நினைவுகளுடன்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்