யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தங்கம் இராமநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் பரிவும் பாசமும்
கொண்ட எம் அன்புத் தாயே!
நீ மீளாத்துயில் கொண்டு பத்து
வருடங்கள் ஆனதே
பரிதவிக்கின்றோம்
பாரில் நாம்
அம்மா என்றழைத்தால்
ஓடோடிவாராது இருப்தேன் தாயே!
நேரில் நின்னை பார்க்காமல்
தவிக்கின்றோம் தாயே!
உன் அன்பும் பாசமும் இன்றுவரை
வாழ்கின்றன-நீ
எம்மை
மறந்ததேனோ தாயே!
எங்கு சென்றாலும் நீ எம்முடன் தானே
வாழ்கின்றாய்
மருமக்களையும்
நேசத்துடன் பார்த்தாய் அவர்களின்
பாசத்தையும் மறந்தாயா தாயே!
அப்பம்மா அம்மம்மா என்று உன்
கதை சொல்லி மகிழும் பேரன் பேர்த்திகளின்
அழைப்பும் உன்னை
வந்தடையவில்லையா தாயே!
ஆம் நீ மீளாத்துயில் கொண்டுவிட்டாய் அம்மா!
வருடங்கள் பத்து ஆனால் என்ன?
இவ்வுலகம் உள்ளவரை
நீ எம்முடன் வாழ்வாய் தாயே!
உன் ஆத்மா சாந்தி பெற
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..!