2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கந்தசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-02-2025
எங்கள் குடும்பத்தின் ஆணிவேரே
கண்மூடி முடிக்குமுன்னே
எம்மை கடந்து விட்டாய் 2ஆண்டே
என்றென்றும் என்னுடன் இணைந்திருப்பபீர்கள்
என
எண்ணிலா கனவு கண்டிருந்தேன்
இடை நடுவில் என்னை தவிக்கவிட்டு
ஏன் மறைந்தீர்கள்
விதி செய்தசதிதானென்று
என் மனது எண்ணினாலும்
என் வாழ்வு உள்ளவரை
நிலலாய் நீங்கள்
தொடர்வீர்கள்
இன்னொரு பிறப்பு இருப்பது
உண்மையெனில்
அப்போதும்
நீங்களே
என் கணவராக
வரவேண்டும் என வேண்டுகிறேன்!!!
தகவல்:
குடும்பத்தினர்