யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-03-2024
ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா
ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்த நீர்
காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே!!!
உங்களோடு மட்டுமல்ல
உங்கள் நினைவோடும்
வாழக்கற்றுத்தந்து விட்டு
நீங்கள் சென்றுவிட்டீர்கள்
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம்
அப்பா...
பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது
ஞாபகங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்..!!
அப்பா! உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல்
தவிக்கின்றோம்
விழித்து நிற்கின்றோம்
விடை தெரியாமல் தானே
பாதி வழியில்
பாசங்களை அறித்தெறிந்து
தூர நீங்கள்
சென்றுவிட்டீர்களே !!!
என்றும் உங்கள் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்