யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், கனடா Hamilton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பாலசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத துயரத்தில் ஆண்டு ஒன்று ஆனதேன்
மீளாத எம் சோகம் மீண்டும் எமை வாட்டுவதேன்
தாளாத எம் மனது தவித்துக் கலங்குவதேன்
நித்தமும் உம் நினைவு நெஞ்சை விட்டு அகலாது
சித்தமழ தவிக்கின்றோம் வாசல் விழி வைத்து
நித்திய பதத்தை நாடி நீங்கள் சென்றது,
விழிநீர் பெருகின்றது அறிவிற்கு தெரிகின்றது
இறைவனின் திருவடியில் நற்பேறு அடைந்திட
தினம் தினம் வேண்டுகிறோம் திருவடியை போற்றி
வற்றாத உம் நினைவில் வானத்தை நோக்குகிறோம்
வாழ்வாங்கு வாழ்ந்த நீங்கள் வானுறையும் தெய்வமன்றோ!
துயரில் மறுகும்
மனைவி, பி்ள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
எமது இதய கனத்துடன் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் ஆத்மா சாந்தி! வட்டாரம் #02