யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.
இருபது ஆண்டுகள் கடந்தாலும்
நீங்கள் போன நாளை
என் மனம் இன்னும் நேற்று போலவே
வைத்திருக்கிறது அப்பா…
உயிர் என்றால் நீங்கள் என்று
நான் நம்பி வளர்ந்த நாட்கள்,
உயிரே நீங்களாகி
என்னைச் சுமந்த உங்கள் தோள்கள்
இன்றும் என் கனவுகளில் வலிமையாய் நிற்கின்றன.அப்பா…
நான் உங்கள்மேல் உயிரையே வைத்திருந்தேன்,
நீங்களோ என்மேல்
உங்கள் உயிரையே வைத்திருந்தீர்கள்.
இப்பவெல்லாம்உங்கள் நினைப்பு அதிகமாகுது அப்பா…
சிரிக்கும்போதும், அழுகும்போதும்,
எதையும் சொல்ல முடியாத
அந்த ஒரு நொடியில்தான்
உங்களைத் தேடி நிற்கிறேன்.
“என் பிள்ளை என்று
நீங்கள் சொன்ன அந்த வார்த்தை
இன்றும் என் காதில் ஒலிக்குது,
உங்கள் மடியில் தலை வைத்து
உலகத்தை மறந்த
அந்த சுகம் வேறு எதிலுமே கிடைக்கல அப்பா…
நீங்கள் இல்லாத இந்த உலகில்நான் வளர்ந்தேன்,
வாழ்ந்தேன்,தோற்றேன்,ஜெயித்தேன்…ஆனால்
ஒரு நாளும் உங்கள் மகளாக இருப்பதை இழக்கவே இல்ல.
இருபது ஆண்டுகள் ஆனாலும்
என் உயிரின் ஒரு பாதி
இன்றும் உங்களோடுதான் அப்பா…
இந்த நினைவு நாளில் கண்ணீரோடு இல்லை,
காதலோடு சொல்கிறேன்—
உங்களைப் போல ஒரு அப்பா
இந்த உலகில்யாருக்கும் கிடைக்க மாட்டார்