Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
தோற்றம் 07 JUL 1948
மறைவு 29 NOV 2022
அமரர் சின்னத்தம்பி சிவராசா (சிவா)
முன்னாள் மெனிக் பாம் முகாமையாளர் - இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு உறுப்பினர்
வயது 74
அமரர் சின்னத்தம்பி சிவராசா 1948 - 2022 சுருவில், Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், பிரவுன் வீதி மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவராசா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 28-12-2022 புதன்கிழமை அன்று காலை 05.00 மணியளவில் முகத்துவார அந்தியேட்டி மண்டபத்திலும், ஆத்ம சாந்திப் பிரார்த்தனை 29-12-2022 வியாழக்கிழமை அன்று காலை 11.30 மணியளவில் பம்பலபிட்டிய கொம்யூனிட்டி சென்ரல் மண்டபத்தில் (Bambalapitya Community Central hall இல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கிறோம்.

முகவரி:

இல. 273/1,
1st செப்பல் லேன்,
கொழும்பு 06.

இங்ஙனம், மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

சி.யசீவன் - மகன்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்