யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ரவீந்திரராஜா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 28-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், 02-03-2023 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்திலும் நடைபெறும். தொடர்ந்து 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் பம்பலப்பிட்டி அரச தொடர்மாடி சனசமூக மண்டபத்தில் (Govt. Flats Community Centre Hall) நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Deepest Condolences to family. May His Soul Rest In Peace.