1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி ரவீந்திரராஜா
1948 -
2023
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி ரவீந்திரராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!
சத்தம் இல்லாமல் சித்தம் துடிக்க வைத்து
மொத்தமாய் எங்களை மோசம் செய்ததென்ன?
ஆண்டுகள் எத்தனை ஆனாலும் நீங்காது உங்கள்
நினைவு எம் நெஞ்சோடு!
இறப்பு அனைவருக்கும் நியதி என்றாலும்
உங்களை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது
மறுபடியும் காணத்துடிக்கிறது
விரல் பிடித்து நடக்க கற்றுத்தந்தீர்
விழியோரம் கண்ணீரை ஏன் விட்டுச்சென்றீர்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Deepest Condolences to family. May His Soul Rest In Peace.