Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 APR 1942
இறப்பு 22 FEB 2018
அமரர் சின்னத்தம்பி இராசம்மா
வயது 75
அமரர் சின்னத்தம்பி இராசம்மா 1942 - 2018 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி இராசம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்
காற்றொன்று வீசியதாய்
நினைவிருக்கிறது
நீ கலைந்துபோன கணம் மட்டும்
நினைவில் இல்லையம்மா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
நினைக்க மனம் மறுக்குதம்மா...

நீ இருந்த இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள் எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்
நிமிடங்களில் நதிகளும் தோற்கின்றன

எங்கள் கண்களின் முன்னால்
காற்றோடு போனவளே வா
காலன் வரும் நேரம்
இதுவென்று நீ உரைத்திருந்தால்
காத்திருப்போம் அம்மா..!

மீட்டும் விரல்களை
தொலைத்த வீணைகளாய் நாமிங்கு..
கார் இருளில் கலைந்தவளே..!
நீ எங்கே? உன்னைத் தொழுதேத்த
எம் முன்னே நீ இல்லையம்மா
உன்னைப் போல் ஓர் தெய்வம்
இப்புவியில் இல்லையம்மா
மனக்கண்ணில் நாளும்
உனைக்கண்டு துதிப்போமம்மா
மண்ணில் எம் உயிர் வாழும் காலம் வரை!

மனதோடு எமை சுமந்து
பிரிவோடு துயர் தந்து
ஆண்டுகள் மூன்று ஆனாலும்
ஆறாது உந்தன் இழப்பின்
துயர் நெஞ்சை விட்டு நீங்காது

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...     

தகவல்: குடும்பத்தினர்