2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 MAR 1942
இறப்பு 05 MAY 2019
அமரர் சின்னத்தம்பி இராசையா
B.Sc Civil Engineer(London), முன்னாள் பிரபல வர்த்தகர், உரிமையாளர்- Petrol Stations, Owner of Shirley View Nursing Home
வயது 77
அமரர் சின்னத்தம்பி இராசையா 1942 - 2019 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 89 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:- 12-05-2021

யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bickley ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி  இராசையா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு இரண்டானாலும்
அப்பா! 
நீங்கள் இல்லாத துயரம்
ஆறவில்லை எம் மனதில், இன்று வரை
எத்தனை வருடங்கள் கடந்தாலும்
எம்மோடு வாழும், உங்கள் நினைவுகள்!

பண்பையும், பாசத்தையும்
பாங்குடனே தந்தவர் நீங்கள் தான்!
துணிவே துணை, தன்னம்பிக்கையே பலம்,
நல்லொழுக்கமே கல்வி, தளராத உறுதி,
வெற்றிக்கு வழி விடா முயற்சி.
என்பதை எமக்கு கற்றுக் கொடுத்த ஆசான்!
அழியாத நினைவுகள் அவை, எம் இதயத்தில் அப்பா!

ஓங்கி வளர்ந்த விருட்சமாய் நின்று
உச்சத்தைத் தொட்ட நீங்கள்,
உதிர்த்துச் சென்றவை ஏராளம்!
இன்று நாம் அனுபவிக்கும், உங்களது
தேட்டங்களின் பராமரிப்பில் எதிர் படும்
பாரங்களைத் தாங்கும் போதெல்லாம்
பெருமையான எங்கள் வாழ்விற்க்காக பாசத்துடன் நீங்கள் தாங்கிய சுமையில்

ஆளுமையின் உன்னதத்தைக் காண்கிறோம் அப்பா!

அப்பா என்னும் சொல்லின்
அர்த்தம் கண்டோம்.
உழைப்பு என்னும் சொல்லின்
உண்மை கண்டோம்.
உறவுகளின் கண்களில் எல்லாம்
உங்களின் பிரிவுக் கவலை இன்னும் மாறவில்லை.

அன்புக் கணவராக, அருமைத் தந்தையாக,
அன்புச் சகோதரனாக ஒவ்வொரு உறவுகளுக்கும்
உற்றவனாக பாசத்தைத் தாங்கிய உங்கள் நினைவு
எங்களை விட்டு என்றுமே நீங்காது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்...
தகவல்: குடும்பத்தினர்

Photos