Clicky

பிறப்பு 05 SEP 1940
இறப்பு 08 JUL 2023
அமரர் சின்னத்தம்பி பேரம்பலம்
முன்னாள் காணி அபிவிருத்தி உத்தியோகத்தர்
வயது 82
அமரர் சின்னத்தம்பி பேரம்பலம் 1940 - 2023 நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நடராசா கமலம் குடும்பம் 14 JUL 2023 Canada

எழுதி முடித்தான் இறைவன் இனி நானென்ன எழுதுவது அழுது முடித்தேன் இன்று உடன் அழுபவர் யாரும் இன்றி உறவுகள் தந்தது உலகம் ஒரு நாள் யாவும் மறையும் பிரிவுகள் தந்தது கண்ணீர் பாசத்தை மனதில் எண்ணி விருந்தோம்பலில் சிறந்தவரே உறவென்று வந்தவுடன் உம் இனிய முகம் எமை அழைக்கும் எமனவனும் அழைத்தவுடன் எம்மை விட்டு சென்றதேனோ நெடுந்தீவில் ஒன்றாய் பிறந்தோமே நெடுநாள் ஒன்றாய் உண்டோமே வாடித்தவிக்க விட்டு வந்த வழி சென்றாயே தேடியும் கிடைக்க மாட்டாய் தேவதூதன் சிறைப்பிடைத்தான் கதறியழ விட்டு விட்டு கண் மூடிச் சென்றுவிட்டாய் விதி வந்து சென்றதேனோ விம்மி விம்மி அழுவதால் ஆவதென்ன வீட்டோடு இருந்ததில்லை காட்டோடு போக நினைத்ததென்ன துக்கத்தை எமக்கு சொத்தாக தந்துவிட்டு தொலைதூரம் பறந்தோடி போனதென்ன பேரனாய் நான் பிறந்தும் என்ன பலன் இறுதி நாள் அருகிலிருந்து பார்க்கவில்லை கிளை இருந்தும் என்ன லாபம் இறுதிக் கிரிகைக்கு கூட பறந்து வரவில்லை மனதில் தேங்கி நிற்க்கும் கவலை சொல்ல வார்த்தையில்லை மண்ணில் உனைக்காணும் நாளும் இனியில்லை வாடித்தவிக்க விட்டு வந்தவழி சென்றீரோ மழைபோல கண்ணீர் சொரிய மனம் ஆற வழியுண்டோ ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி