திதி:27/06/2024
யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன் குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி பேரம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று கடந்தாலும்
நேற்றுப் போல் எல்லாமே
எங்கள் நெஞ்சில் நிழலாடுதப்பா..!
விழிமூடும் பொழிதினிலும்
விம்பமாய் முகம் தானே
வந்து நிழலாடுதப்பா..!
நீங்கள் நட்டு வைத்த
மரக்கிழையில்
மோதியெழும்
காற்றோசை- உங்கள்
காந்தக்
குரல் போல- எம்
காதோரம் கேட்டுதப்பா..!
இன்னும் தான் எங்கள்
ஈரவிழி காயவில்லை
ஊரும் உறவுகளும்
உற்றதுயர் ஆறவில்லை
வாஞ்சையுடன்
அழைக்கின்றோம்
ஒருமுறை வந்து
முகம் காட்டுங்கள் அப்பா..!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைகழல் பணிகின்றோம்..!
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 27-06-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறும் தருணம், எமது அன்புத் தெய்வத்தின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் தாங்கள் தங்கள் குடும்பத்தினரும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
136, பாண்டியன்குளம்,
நட்டாங்கண்டல்.
எழுதி முடித்தான் இறைவன் இனி நானென்ன எழுதுவது அழுது முடித்தேன் இன்று உடன் அழுபவர் யாரும் இன்றி உறவுகள் தந்தது உலகம் ஒரு நாள் யாவும் மறையும் பிரிவுகள் தந்தது கண்ணீர் பாசத்தை மனதில் எண்ணி...