யாழ். நெடுந்தீவு கிழக்கு 13ம் வட்டாரம் முறுக்கனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளம் 1ம் குறுக்குத்தெரு முதலியார் குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி பசுபதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்!
அழியாது நம் துயரம் மறையாது
உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது...
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா
என ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்...
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
I miss you periyappa, Asok kumar from Australia.
பசுபதி ஐயா! உங்களோடு இருந்த அந்த ஒரு நாள் என்னால் மறக்க முடியாது.நீங்கள் எவ்வளவு அனுபவம் மற்றும் ஞாபகம் வைக்கும் திறன் கொண்டவர் என்பதை என்னால் உணர முடிந்தது.உங்களைப் பார்க்க ஒரு நாளைத்தந்த இறைவன்...