Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 MAR 1939
இறப்பு 02 AUG 2025
அமரர் சின்னத்தம்பி நடராசா (ஐயா)
வயது 86
அமரர் சின்னத்தம்பி நடராசா 1939 - 2025 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி வல்வெட்டி சீனட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அஷ்டமி வளர்பிறை திதி : 21-07-2026

ஆண்டு ஒன்றாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை

பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே? 

பாவிகள் நாங்கள் உங்கள்
நினைவில் பரிதவித்து
நிற்கின்றோம் இன்று..

"காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!

இன்றுடன் ஓர் ஆண்டு ஓடி
மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும் குடும்பத்தினர்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்