எமது அன்புச் சித்தப்பா அமரரர் கனகவேல் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து ஆழ்ந்த கவலை அடைந்தோம். எமது ஐயாவின் ஒன்றுவிட்டசகோதரர் என்பதால் அவர் எமக்குச் சித்தப்பா. உறாவால் நாம் அன்புடன் ஒன்றாகப் பழகியதை விட அன்பால் - நட்புறவுடனேயே அமரர் கனகவேல் அவர்களின் குடும்பத்தினருடன் நெருங்கி உறாவாடி வருகிறோம் என்பதே உண்மை. நாங்கள் யாழ்ப்பாணம் செல்லும்போதெல்லாம் அவர்களின் இல்லம் செல்லத் தவறுவதில்லை. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அமரர் கனகவேல் அவர்கள் சித்தியுடன் பாரிஸ் நகருக்கு வந்திருந்து எமது வீட்டில் சில காலம் தங்கிநின்று எம்மை மகிழ்வித்த நாட்களை எம்மால் மறக்க முடியாது. ஒரு காலத்தில் நாம் சித்தன்கேணியில் இருந்து நல்லூர் திருவிழா அல்லது தேருக்குச் சென்றால் எம்மைப் போன்ற பலருக்கு அமரரின் வீட்டில்தான் விரதத்துக்கான விருந்து. அந்த நாட்களை என்றுமே மறக்க முடியாது. நீண்ட காலம் இலங்கை வங்கியில் பணியாற்றிய அமரர் கனகவேல் அவர்கள் அங்கு வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்று அவர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றுவதை பல தடவைகள் நேரில் பார்த்திருக்கிறேன். நாங்கள் திருமணம் முடிப்பதற்கு முன்னர் எமது பாரியாருக்கு யாழ்.. இலங்கை வங்கியில் கணக்கு ஆரம்பித்துக் கொடுத்து அங்கு செல்லும் வேளைகளில் எல்லாம் அவரது தேவைகளை இன்முகத்துடன் நிறைவேற்றிக் கொடுத்த நாட்களை எனது மனைவி அடிக்கடி நினைவுகூருவார். எனது ஐயா மீது அன்னாருக்கு இருந்த மரியாதையையும் நாம் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. நல்ல மனிதரை - பண்பாளரை - மென்மையான உள்ளம் படைத்தவரை இழந்து அல்லலுறும் அன்னாரின் மனைவி(சித்தி) பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு எமது ஆழந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா அடையவும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்
Dear Kamalaloshini and brother and other family members, Pease accept our heartfelt condolences on the death of your mother. Thuraisingham