1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 JAN 1942
இறப்பு 31 MAY 2021
அமரர் சின்னத்தம்பி அழகு 1942 - 2021 வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டித்துறை இலந்தைக்காடைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, கனடா Montreal, Cornwall நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி அழகு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 20-05-2022

ஆண்டுகள் ஒன்று ஓடி மறைந்ததப்பா ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்த நீர் காயவில்லை
எம்முயிரான எங்களப்பாவே

உன்னோடு மட்டுமல்ல
உன் நினைவோடும் வாழக்கற்றுத்தந்து விட்டு
நீ சென்றுவிட்டாய்

முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம்
பார்க்காமல் தவிக்கின்றோம்

விழித்து நிற்கின்றோம் விடை தெரியாமல் தானே
பாதி வழியில் பாசங்களை அறித்தெறிந்து
தூர நீங்கள் சென்றதேனோ!

என்றும் உம் பிரிவால் வாடும்
அன்பு குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Photos