2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 JAN 1938
இறப்பு 23 JUN 2019
அமரர் சின்னத்தம்பி வீரசிங்கம்
ஓய்வுபெற்ற தபாலதிபர், முன்னாள் இணக்கசபைத் தலைவர்- கரவெட்டி, அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 81
அமரர் சின்னத்தம்பி வீரசிங்கம் 1938 - 2019 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி வீரசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு இரண்டு அகன்றோடி மறைந்தாலும்
உங்கள் நினைவு என்றும் மறக்காது

அன்பான குடும்பத்தின் குல விளக்கே!
உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே

இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!

உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!

ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!

மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
பிராத்தி்க்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்
ஓம் சாந்தி..! சாந்தி....! சாந்தி...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos