2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னத்தம்பி தர்மராசா
வயது 77

அமரர் சின்னத்தம்பி தர்மராசா
1945 -
2022
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுத்தீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுத்தீவு 2ம் வட்டாரம், ஜேர்மனி Hannover ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி தர்மராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே
விழிமூடி எம்மை வழிகாட்டும்
எங்கள் ஒளியான தந்தையே-
ஓடி வருவீரோ எம் நல்வாழ்வை
காண நேரில் வருவீரோ!
வாழ்வை வென்றுவிட்டேன் என்று
வானகம் நீங்கள் சென்று விட்டீர்கள்
ஏங்கித் தவித்து இன்று இரண்டு ஆண்டு
முடித்துவிட்டோம்!
நித்தமும் எங்கள் நினைவில்
நின்று கொண்டு நிஜத்தில்
இறைவனுடன் கலந்திட்ட உங்கள்
ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்