
யாழ். சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பேரம்பலம் அவர்கள் 05-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி இராமலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அமிர்தலோஜினி, விமலகேசினி, குலேந்திரன்(லண்டன்), குமுதினி(லண்டன்), ரஞ்சினி, சுபாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பகவதி, பரமசாமி, கானகசபை, சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற அன்னம்மா, விக்கிரமசிங்கம், இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சண்முகநாதன், பத்மநாதன், சுதர்ஷினி(லண்டன்), சிவராசா(லண்டன்), அருட்செல்வன், சர்வானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வாகுலன், மேனகா, கஜிகுலன்(கனடா), கீர்த்தனா, நர்மதன், யதுஷிகா, ஹரி சாஹித்தியா(லண்டன்), ஹரிணி, சம்யுக்தா(லண்டன்),தாருஜன்(லண்டன்), லதுஷனா(லண்டன்), தஸ்வந்திகா, தந்துகி, அகர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஷத்விகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கண்னாடிப்பிட்டி மயானத்தில்பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பேரம்பலம் மச்சான் மறைவையொட்டி எனது அனுதாபங்கள் . அவருடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளைத் தேடுகிறேன். அவருடைய ஆத்மா இறைபதம் அடைய இறைவனிடம் வேண்டுகிறேன் .