Clicky

25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 28 APR 1936
மறைவு 14 MAR 2001
அமரர் சின்னத்தம்பி குமாரசூரியர்
வயது 64
அமரர் சின்னத்தம்பி குமாரசூரியர் 1936 - 2001 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அமரர் சின்னத்தம்பி குமாரசூரியர்
பிறப்பு : 28 Apr, 1936  இறப்பு : 14 Mar, 2001 

திருகோணமலை தம்பலகாமத்தைப் பிறப்பிடமாகவும், உவர்மலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி குமாரசூரியர் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அமரர் குமாரசூரியர் தெய்வானைப்பிள்ளை (பூமணி)
பிறப்பு : 22 Feb, 1948  இறப்பு : 13 Apr, 2020 

திருகோணமலை உவர்மலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசூரியர் தெய்வானைப்பிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.  

உங்களை இழந்து
ஆண்டுகள் இருபத்தைந்து ஆனாலும்
ஐயா உங்கள் அன்பு முகமும்
அமைதியின் உருவமும்
நேசப் புன்னகையும் மறையவில்லை

நீங்கள் இவ்வுலகில் நேர்வழி காட்டி
நாம் சென்ற பாதையெல்லாம்
நல்லவராய் வேண்டுமென்று
கண்மணி போல் காத்திருந்த
எம் தந்தையே! எங்கு சென்றாய்? 

பாரினில் மதிப்புடனும்
பண்புடனும் வாழ்ந்தீர்!
எங்களையும் வாழ வைத்தீர்!
உங்கள் பண்பும் மதிப்பும் உள்ள
பிள்ளைகளாக நாங்கள் வாழ்ந்திடுவோம்

ஆண்டுகள் இருபத்தைந்தல்ல
நம் மூச்சுள்ளவரை
உங்களை மறவோம் ஐயா!

உங்களை இழந்து ஆண்டு ஆறு ஆனாலும்
உங்கள் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை..!

நேற்று போல் இருக்கிறது
உங்கள் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் எங்களை மறந்தீர்கள்!

நாங்கள் உங்களை
பிரியவில்லை - ஆனால்
நீங்கள் எங்கள் அருகில் இல்லை
உங்களை  யாசிக்கிறோம் - அதைவிட
உங்களை நேசிக்கிறோம்..!

எங்கள் மூச்சு காற்றோடு
 மட்டும் தான் உங்கள் உரசல்கள்
நீங்கள் காற்றோடு தானே கலந்துவிட்டாய்..
எங்கள் உயிரில் கலந்ததுபோல்

எம்மை வழிநடத்த நீங்கள் இருந்த பொழுதுகளின்
 நினைவோடு வாழ்கின்றோம்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices