யாழ். காரைநகர் களபூமி தன்னையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி ஆறுமுகம் நடராஜா அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
முப்பது ஆண்டுகள் போனாலும்
முப்பது நிமிடங்கள் போல் உள்ளதப்பா..!!
மறப்பதற்கு மனதிலும் இழப்பதற்கு
இதயத்திலும் வைக்கவில்லையப்பா
உயிராய் வைத்திருக்கின்றோம்..!!
எம் அன்புத் துணையே ! எம்மவரின் ஆருயிரே !
அன்பு அப்பா உன் அழகுமுகம் பார்க்க
அவதரித்த உம் ஆலம் விழுதுகள்
விம்மி விழுந்து வீரிட்டுக் கிடக்குதையா!
மண்ணில் உன் மதிமுகம் காட்டையா
எம் பண்பின் பகலவனே
பதைபதைத்து பதறுகின்றோம் நாமிங்கு
உம் பால்வடியும் முகம் காணதுடிக்கின்றோம் இப்போ
தோத்திரத்தால் தொழுது விழுகின்றோம்
தோன்றி ஒருமுறை உன் தூயமுகம் காட்டையா !!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,
பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள்
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!