

யாழ். வல்வெட்டித்துறை கொத்தியாலைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை ஊரிக்காடு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா தங்கத்திரவியம் அவர்கள் 29-06-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லக்கண்டு பரியாரியார் வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னராசா(கறுவல் குட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமளா(கனடா), மஞ்சுளா(ஊரிக்காடு- வல்வெட்டித்துறை), சிவனேசன்(ஜேர்மனி), அருள்நேசன்(லண்டன்), பிறேமளா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, கதிர்காமத்தம்பி, சண்முகவடிவேல், தங்கவடிவேல் மற்றும் சாந்தா, ராணி, சந்தனம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தரலிங்கம், ரட்ணபாலன், வதனா, லலிதா, ஜெயம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தீபக், தர்சி, றஜிதா, றேணுஜா, ராகவன், சர்மிளா, சாதனா, அருண், ஆசா, அர்ஜூன், தீபா, திலக், ஜெனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரீத்திகா, பிரணீத்தா, பால்ராஜ், பரத்ராஜ், அகீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-06-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 15:00 மணியளவில் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest In Peace, amma From Thilagam,Indra