(பிறப்பு 22 Aug, 1944 - இறப்பு 31 Jan, 2026)
யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கெங்காதரன் சறோஜினிதேவி அவர்கள் 31-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
ஆருயிர் அன்னையே…
மாதம் ஒன்று ஆனதோ
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து...
நாட்கள் 31 கடந்தும் மீளவில்லை
உங்கள் நினைவில் இருந்து தாயே
அம்மா உங்கள் கடமைகளை மிகவிரைவில்
முடித்துக்கொண்டு எங்களிடமிருந்து
சென்றுவிட்டீர்களே!
மீண்டும் ஒரு பிறப்பிருந்தால்
எங்களுக்கு அம்மாவாக வந்திடுங்கள்
காத்திருப்போம்!
எவ்வளவு காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எங்களை விட்டு போகாது
அம்மா...!
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டிக் கிரியைகள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்களும் வருகை தந்து ஆத்ம சாந்திப் பிரார்த்தினையிலும் அதனைத்தொடரந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், துண்டு பிரசுரம், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
சின்னப்பு கெங்காதரன்((பிரபல மில், லொறி உரிமையாளர்):-
(பிறப்பு 01 Dec, 1947 -இறப்பு 03 Mar, 2018)
யாழ். சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு கெங்காதரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு எட்டு ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது, அப்பா
சிரித்த முகத்தோடும் செயற்திறன்
தன்னோடும் செம்மையாய்
வாழ்ந்த அப்பா!
ஆண்டு எட்டு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள்
நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல்
எம்மைக் காத்த அன்புத் தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
விதித்ததோர் விதியதால்
விண்ணகம் சென்றதைப்
பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு
முகம் மறைந்தாலும் அழியாது
நினைவலைகள்! பாசத்தின்
பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
உங்கள் இருவர் ஆத்மா சாந்தியடைந்து இறைவனடி சேர
எல்லாம் வல்ல பிராயடி வைரவரும் நுணுவில் பிள்ளையாரினதும்
அருள் கிடைத்திட பிராத்திக்கின்றோம்..!