Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 15 SEP 1955
விண்ணில் 02 APR 2021
அமரர் சின்னப்பு எட்மன் யூலியஸ் (இன்பன் அண்ணா)
வயது 65
அமரர் சின்னப்பு எட்மன் யூலியஸ் 1955 - 2021 Munai, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். பருத்தித்துறைமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு எட்மன் யூலியஸ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஈராண்டுகள் ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 03 Apr, 2021
நன்றி நவிலல் Sat, 01 May, 2021