திதி: 21-01-2024
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னப்பு செல்வகுலராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உங்கள்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்- எங்கள்
ஈர விழியோடு
அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த
ஏன்? எங்கே? பிரிந்து போனீர்கள்!
நீ இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
மனைவியும், பிள்ளைகளும்
உமை நினைத்து வாடிடவே
போனது எங்கேயோ? உறவுகளைப் பிரிந்து!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Nalliah Suresh Family From France.
Rip