யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னம்மா செல்லத்துரை அவர்கள் 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னாச்சன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் செல்லத்துரை அவர்களின் பாசமிகு துணைவியும்,
கருணாதேவி(கனடா), சுசிலாதேவி(கனடா), சண்முகம்(கனடா), சரோயினிதேவி(இலங்கை), வயவநாதன்(கனடா), சற்குணநாதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சிங்கராசா, முத்தம்மா மற்றும் செல்லம்மா, தங்கம்மா, பொன்னம்மா, அன்னபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கோபாலசிங்கம், காலஞ்சென்ற கோபாலசுந்தரம், சிவபுத்திரன், சிறீரஞ்சினி, ஜெயந்தி, அனுசா ஆகியோரின் ஆசை மாமியாரும்,
தேவசிங்கா, நிதிசிங்கா, நீதிசிங்கா, தேவநிதிநீ, உமா, உமாதரன், உமாகரன், உமாசங்கர், ரயீவ், புவனரேகா, பிரயன், சகானா, நயோமி, நயனன், சிறிராம், திவ்வியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரித்திகா, பிரகாஸ், கெய்சன், ஏரன், வரூண், அயண், சாயுகன், சாயகா, லக்சிகா, காவியன், வித்தகன், வர்சிகா, சுருதிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Sorry to hear your loss, our thoughts and prayers are with your family