Clicky

பிறப்பு 26 DEC 1934
இறப்பு 24 MAY 2020
அமரர் சின்னம்மா கந்தையா 1934 - 2020 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

7 Brantley Cres Toronto M3J1X4 26 MAY 2020 Canada

அன்பான தங்கச்சியே அருமையான தங்கச்சியே எங்கள் குடும்பத்தில் இறுதி மும்மூர்த்திகளில் நீ தான் இறுதியானாய் இதனாலே செல்லப்பிள்ளை எல்லோரும் நெடுந்தீவு பிராமண வளவினிலே நாம் பிறந்தோம். மதிப்புடனே வாழ்ந்து வந்தோம். இறைவனது கண் பட்டதுவோ அனைவரும் கொழும்புத்துறை நோக்கி 1932 ல் நாம் வந்தோம். ஒன்றாக அங்குள்ள மகாவித்தியாலயத்தில் நாம் படித்தோம். ஒன்றாக போய் வருவோம். உருத்திரபுரத்தில் வீடு கிடைத்ததால் அங்கு சென்றோம்.அங்கும் நீ படித்தாய். SSC வகுப்பிற் சித்தி பெற்றாய். எங்கு போனாலும் நீதான் துணையானாய். எப்பொழுதும் உதவி செய்வாய். 2015ல் நாம் வீடு வந்தபோது வீட்டைத்தர படையினர் மறுத்தபோது தங்க இடம் தந்தாய் நீங்களும் தடுப்பில் இருந்து வெறும் கையுடந்தான் வந்தாய் இவையெல்லாம் ஊரறியும் இப்போது எம்மை தவிக்கவிட்டு எங்கு சென்றாய் நெடும்தூரம் நேற்றிருந்தார் இன்றில்லை என்ற உலகினிலே இதுதான் நியதி என்று ஆறுதல் அடைவோம் தங்கள் ஆத்மா சாந்தி பெற வேண்டும் என்று சாந்தி சாந்தி என்று சாந்தி அடைவோம்.