Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னக்குட்டி சின்னையா
இறப்பு - 09 OCT 2012
அமரர் சின்னக்குட்டி சின்னையா 2012 மந்துவில், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மந்துவிலைப் பிறப்பிடமாகவும், வரணி, வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னக்குட்டி சின்னையா அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.

உம்மைப் பறிந்து பதின்நான்கு
 ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
 கழிந்து போனதே அப்பா!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: சிவநேசன்(Leicester)

Photos

No Photos

Notices