Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 29 MAR 1927
இறப்பு 11 SEP 2020
அமரர் சின்னக்குட்டி சபாரத்தினம்
ஓய்வு பெற்ற யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூட உதவியாளர்
வயது 93
அமரர் சின்னக்குட்டி சபாரத்தினம் 1927 - 2020 உடுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் முத்துக்கிருஷ்ணர் வீதி, இங்கிலாந்து Crawley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி சபாரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட சின்னக்குட்டி சபாரத்தினம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில்வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், காலத்தின் தேவை கருதி நேரடி ஒளிபரப்புக்கு ஒழுங்கமைத்து உதவிய லங்காசிறி நிறுவனத்தாருக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்து கொண்டிருக்கும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத உறவுகளையும் கலந்து கொண்டதாகவே நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 10-10-2020 சனிக்கிழமை அன்று நடைபெறும் 

அன்னாரின் 31 ம் நாள் சமயக்கிரியைகள் 11-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் covid 19 சட்டத்திற்கு அமைவாக குடும்பத்தினருடன் இடம்பெற உள்ளது.

Thank You Message

As we had been in deep grief after hearing the demise of our loved one, we would like to thank all those relatives, friends and all people who had been helpful to us. We deeply appreciate your sympathy by sending condolence messages in person, through phone calls, mails and social medias. Your words and support have been very helpful to us in this time of grief.

We acknowledge the many who could not join us for the funeral.

Anthiyeddy Religious function will be held on Saturday 10-10-2020

31st Day Remembrance function will be held on Sunday 11-10-2020 at his home and will feature family in accordance with current covid 19practises.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 24 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.