யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் முத்துக்கிருஷ்ணர் வீதி, இங்கிலாந்து Crawley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னக்குட்டி சபாரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை அப்பா!!
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து
ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
எங்களை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்,
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்
அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
எத்தனை உறவுகள் எம்மை
சூழ்ந்திருந்தாலும்
அத்தனை உறவுகளும்
உங்களுக்கு ஈடாகுமா- - - - ?
நிலையில்லா இவ்வுலகில்
நிலைத்திருக்கும் உங்கள் உறவால்
நினைவிழக்க மாட்டாமல்
நீந்துகின்றோம் கண்ணீரில்
மரமிருக்கும் நாள்வரையில்
நிழலிருக்கும் பூமியிது
நாமிருக்கும் நாள் வரையில்
நீங்கள் இருப்பீர்கள் எம் இதயத்துள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றென்றும் உங்கள் நினைவில் வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
4 years today since you left us 💔